உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / விலை உயர்ந்த சுரைக்காய்

விலை உயர்ந்த சுரைக்காய்

ஒட்டன்சத்திரம்: திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் மழையால் வரத்து குறைந்து சுரைக்காய் விலை அதிகரித்து கிலோ ரூ.15க்கு விற்பனையானது.ஒட்டன்சத்திரம், காவேரியம்மாபட்டி, அம்பிளிக்கை, அரசப்பிள்ளைபட்டி, சாமியார்புதுார்,மலை கிராமங்களில் சுரைக்காய் அதிகமாக விளைவிக்கப்படுகிறது. மழைக்கு முன்பு விளைச்சல் அதிகமாக இருந்ததால் மார்க்கெட்டிற்கு வரத்து கணிசமாக அதிகரித்து காணப்பட்டது. இதன் காரணமாக சுரைக்காய் கிலோ ரூ.10க்கு விற்றது. இந்நிலையில் கடந்த வாரம் பெய்த மழை காரணமாக விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டு வரத்து மிகவும் குறைந்து காணப்பட்டது. இதனால் சுரைக்காய் விலை கிலோவுக்கு ரூ.5 அதிகரித்து ரூ.15க்கு விற்பனையானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை