கண் பரிசோதனை முகாம்
நெய்க்காரப்பட்டி, : பழநி நெய்க்காரப்பட்டியில் செயல்பட்டு வரும் குருவப்பா மேல்நிலைப்பள்ளி, கிரசன்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் எஸ்.கே.சி. மீனாட்சிசுந்தரம் நிறைவு அறக்கட்டளை சார்பாக இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. இதில் குருவப்பா மேல்நிலைப்பள்ளி செயலர் ராஜ்குமார், பள்ளிக்குழு தலைவர் சித்ரா, பள்ளி குழு உறுப்பினர் ராஜாகவுதம், தலைமை ஆசிரியர் சுப்பிரமணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.