உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / உழவர் சந்தையில் விவசாயிகள் வியாபாரிகள் வாக்குவாதம்

உழவர் சந்தையில் விவசாயிகள் வியாபாரிகள் வாக்குவாதம்

பழநி பழநி உழவர் சந்தையில் தக்காளி விற்பனை செய்ய வந்த வியாபாரிகளால் வாக்குவாதம் ஏற்பட்டது.பழநி, உழவர் சந்தையில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை விற்பனை செய்ய பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் உழவர் சந்தைக்கு வெளியே வியாபாரிகள் அதிக அளவில் காய்கறிகளை ஆக்கிரமித்து விற்பனை செய்து வருகின்றனர். நேற்று காலை வெளிமாநில தக்காளிகளை உழவர் சந்தைக்கு விற்பனைக்கு வியாபாரிகள் கொண்டு வந்தனர். இதனால் உழவர் சந்தை விவசாயிகள் வேளாண் அதிகாரிகள் மற்றும் வியாபாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து தக்காளி கொண்டு வந்த வாகனங்கள் வெளியேற்றப்பட்டது. அதிகாரிகள் வியாபாரிகளுக்கு துணை போகாமல், உழவர் சந்தைக்கு உற்புறம் மற்றும் வெளியே உள்ள வியாபாரிகளின் ஆதிக்கத்தை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை