உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / சூறைக்காற்று, சாரல் மழையால் முருங்கை சாகுபடி பாதிப்பு பூக்கள் உதிர்வால் விவசாயிகள் விரக்தி

சூறைக்காற்று, சாரல் மழையால் முருங்கை சாகுபடி பாதிப்பு பூக்கள் உதிர்வால் விவசாயிகள் விரக்தி

ரெட்டியார்சத்திரம்: முருங்கை சாகுபடியில் பூக்கள் உதிர்வால் , விவசாயிகள் மகசூல் பாதிப்பு அச்சத்தில் உள்ளனர்.ரெட்டியார்சத்திரம் பகுதியில் குட்டத்துப்பட்டி, மாங்கரை, அம்மாபட்டி, வெயிலடிச்சான்பட்டி, மைலாப்பூர், சின்னாளபட்டி அருகே பெருமாள்கோயில்பட்டி, அமலிநகர், நடுப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் பலர் செடி முருங்கை சாகுபடியை மேற்கொண்டு வருகின்றனர். இதன் இடையே பலர் வெங்காயம், தக்காளியை ஊடுபயிராக சாகுபடி செய்துள்ளனர். பெரும்பாலான இடங்களில் பூக்கள் பெருகி, காய் பிடிக்கும் நிலையில் உள்ளது. இச்சூழலில் அவ்வப்போது சாரல் மழை, சூறாவளி காற்று வீச துவங்கி உள்ளது. இதையடுத்து முருங்கை பூ, காய்கள் உதிர்தல் அதிகரித்து வருகிறது.நடுப்பட்டி விவசாயி காளிமுத்து கூறுகையில், சமீபத்திய சூறைக்காற்று, சாரல் மழையால் வெகுவாக பூக்கள் உதிர துவங்கியுள்ளது. மழை நேரங்களில் பூக்களுடன் காய்களும் சிறு மரங்களும் ஒடிந்து வீணாகிறது. மகசூலில் இப்பிரச்னை பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ