மேலும் செய்திகள்
மாதப்பூர் கோவிலில் உழவாரப் பணி
27-Sep-2026
நத்தம்: நத்தம்-கோவில்பட்டி கைலாசநாதர்- செண்பகவல்லி அம்மன் கோயிலில் சிவனடியார்கள் திருக்கூட்டம், தென் கைலாய பக்திப் பேரவை சார்பில், உழவாரப் பணிகள் நடந்தது. இதில் இக்கோயிலில் உள்ள மூலவர் சன்னதி, விநாயகர், முருகன், பைரவர், தட்சிணாமூர்த்தி, நாகம்மாள் உள்ளிட்ட அனைத்து பிரகார சன்னதிகளிலும் தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்யப்பட்டது. தொடர்ந்து கோயில் வளாகத்தில் கிடந்த குப்பை அகற்றபட்டு கோயில் பிரகாரத்தில் இருந்த செடி, கொடிகள் அகற்றபட்டன. இப்பணியில் நத்தம் சிவனடியார்கள் திருக்கூட்டம், தென் கைலாய பக்தி பேரவையை சேர்ந்தவர்கள் ஈடுபட்டனர்.
27-Sep-2026