பழநியில் தொடர் திருட்டுமக்கள் அச்சம்
பழநி: பழநி நகரில் சில நாட்களாக தொடர் திருட்டு நடைபெற்று வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். சண்முகபுரம் திருவள்ளுவர் சாலையில் உள்ள டீக்கடை உடைக்கப்பட்டு கடையில் இருந்த ரூ.2000 திருடு போயிருந்தது. இதே போல் அருகில் உள்ள டீக்கடைகளிலும் பணம் திருடு போயிருந்தது. இது போல் சங்கிலி கேட் பகுதி கடை, கோயிலிலும் திருட்டு முயற்சி நடந்துள்ளது. தொடர் திருட்டால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.