உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  ரூ.2 கோடி கையாடல் பெண் ஊழியர் கைது

 ரூ.2 கோடி கையாடல் பெண் ஊழியர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், பழநி, தாழையூத்தை சேர்ந்தவர் முத்து நாராயணன்; நிலக்கடலை பொடி, மரத்துாளை பதப்படுத்தி பாய்லர் எரிபொருள் தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தில் சுக்கமநாயக்கன்பட்டியை சேர்ந்த கலையரசி, 43, என்பவர் மேலாளராக இருந்தார். இவர், சக ஊழியர்களான பழநி, மானுாரை சேர்ந்த ரஞ்சிதா, 34, புஷ்பத்துார் கவுதம், 34, ஆகியோருடன் சேர்ந்து, கொள்முதல், இயந்திர பழுது, புதிய இயந்திரம் நிறுவுதல், சம்பளம், வாகன செலவு என பலவற்றிற்கு, போலி பில்களை தயாரித்து, 2 கோடி ரூபாய் வரை கையாடல் செய்தனர். முத்துநாராயணன் புகாரில் மேலாளர் கலையரசியை போலீசார் கைது செய்தனர். மற்ற இருவரிடம் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி