பழநியில் ரோட்டோரத்தில் பெண் சிசு வீச்சு
பழநி: பழநியில் ரோட்டோரத்தில் பெண் சிசுவை வீசிச் சென்றவரை போலீசார் தேடுகின்றனர்.பழநி- கோவை சாலை சண்முக நதி பனையடி பகுதி ரோட்டோரம் புளிய மரத்தடியில் குழந்தை அழுகும் சத்தம் கேட்க மக்கள் அங்கு சென்று பார்த்தபோது பிறந்து சில நாட்களே ஆன பச்சிளம் பெண் குழந்தை பிளாஸ்டிக் கவரில் கிடந்தது. அங்கு வந்த போலீசார் குழந்தையை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பழநி டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.