உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  குப்பையில் தீ; பக்தர்கள் அவதி

 குப்பையில் தீ; பக்தர்கள் அவதி

பழநி: பழநி இடும்பன் மலைக்கு செல்லும் வழியில் ரோட்டோரத்தில் குப்பைகள் தீப்பற்றி புகைமண்டலமாக இருப்பதால் பக்தர்கள் அவதிப்படுகின்றனர். பழநி கோயிலுக்கு சிவகிரி பட்டி பைபாஸ் ரோட்டிலிருந்து இடும்பன் இட்டேரி ரோடு வழியாக செல்லலாம். இந்த ரோடு கிழக்கு கிரி வீதியில் சுற்றுலா பஸ் ஸ்டாண்ட், இடும்பன் மலை, ஆண்டவன் பூங்கா ரோடு, திண்டுக்கல் ரோடு செல்லும் இட்டேரி பாதை ஆகியவற்றை இணைக்கிறது. இடும்பன் மலை அருகே செல்லும் பகுதியில் இந்த ரோட்டோரத்தில் குப்பைகள் கொட்டப்படுகின்றன. நேற்று இந்த குப்பைகளில் தீப்பற்றி புகைமண்டலமாக காட்சியளித்தது. இதில் உள்ள கண்ணாடி பாட்டில்கள் வெடித்து சிதறின. இதனால் அப்பகுதியில் வாகனங்களில் செல்பவர்கள், பக்தர்கள் அச்சமடைந்தனர். இதனை கட்டுப்படுத்த நகராட்சி அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை