தீ தடுப்பு விழிப்புணர்வு ஒத்திகை
திண்டுக்கல் : பொதுமக்களுக்கு தீ அபாயம், தீ விபத்துக்கள் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திண்டுக்கல் தீயணைப்பு, மீட்பு பணிகள் நிலையத்தில் உதவி மாவட்ட தீயணைப்பு அலுவலர் மயில்ராஜ் தலைமையில் தீ தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. இதில், கேஸ் சிலிண்டர் விபத்து, தீ விபத்து ஏற்பட்டால் வீட்டில் உள்ள பொருட்களை பயன்படுத்தி எவ்வாறு பாதுகாப்பாக செயல்படலாம், தீ வகைகள், ஒவ்வொரு வித தீயையும் எப்படி கட்டுப்படுத்தவேண்டும் என விழிப்புணர்வு வகுப்பு எடுக்கப்பட்டது. பழநி : பழநி, தீயணைப்புத்துறை சார்பில் புது தாராபுரம் ரோடு தீயணைப்பு துறை அலுவலகத்தில் நிறைய அலுவலர் காளிதாஸ் தலைமையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் சிலிண்டர், எண்ணெய், பட்டாசு போன்றவற்றால் ஏற்படும் தீ விபத்துகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. தீ பரவாமல் தடுப்பது குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.