மேலும் செய்திகள்
கார் விபத்தில் பள்ளி மாணவர் பலி
10-Mar-2025
சாணார்பட்டி: கோபால்பட்டி அருகே கேனில் பெட்ரோல் வாங்கி டூவீலரில் சென்ற போது தீ பரவியதில் சிறுவர்கள் இருவர் காயமடைந்தனர். கொரசினம்பட்டியை சேர்ந்த வெள்ளைச்சாமி மகன் பத்மநாபன் 18, ஆண்டிச்சாமி மகன் அலெக்ஸ் 17. இருவரும் வேம்பார்பட்டி அரசு பள்ளியில் படிக்கின்றனர். நேற்று மாலை 6:00 மணிக்கு டூவீலரில் கோபால்பட்டி சென்று பிளாஸ்டிக்கேனில் பெட்ரோல் வாங்கியப்படி வீடு திரும்பினர். டூவீலரை பத்மநாபன் ஓட்டினார். அலெக்ஸ் பின்னால் அமர்ந்திருந்தார். கனவாய்பட்டிபங்களாவில் வந்தபோது குறுக்கே சென்ற சிறுவன் மீது மோதியதில் டூவீலர் சரிந்தது. கேனில் வாங்கி வந்த பெட்ரோல் கொட்டியதில் டூவீலர், பத்மநாபன், அலெக்ஸ் மீது தீப்பற்றியது.இருவரும் மருத்துவமனையில் அனுமதிப்பட்டுள்ளனர்.
10-Mar-2025