கொடையில் மீன் பிடித்தல் போட்டி
கொடைக்கானல்: -கொடைக்கானலில் மலர் கண்காட்சி , கோடை விழாவை யொட்டி கொடைக்கானல் ஏரியில் மீன்வளத் துறை சார்பில் துாண்டில் மீன் பிடித்தல் போட்டி நடந்தது. 11 பேர் கலந்து கொண்ட இதில் கொடைக்கானலை சேர்ந்த செல்வம் முதல் பரிசை வென்றார். இரண்டாவது பரிசு அருமைநாயகம் பெற்றார். மீன்வள உதவி இயக்குனர் கொழுஞ்சிநாதன், சுற்றுலா அலுவலர் கோவிந்தராஜ், உதவி சுற்றுலா அலுவலர் சுதா, மேற்பார்வையாளர் ராஜகுரு பரிசுகளை வழங்கினர்.