கொடை யில் நிறைவு பெற்றது மலர்கண்காட்சி
கொடைக்கானல்:கொடைக்கானல் பிரையன்ட் பூங்காவில் நடந்த மலர் கண்காட்சி ,கோடை விழா நேற்று நிறைவடைந்த நிலையில் 2024 ஐ காட்டிலும் இந்தாண்டு அதிக வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. திண்டுக்கல்மாவட்டம் கொடைக்கானல் பிரையன்ட் பூங்காவில் 62 வது மலர் கண்காட்சி ,கோடை விழா மே 24ல் தொடங்கி நேற்று வரை நடந்தது. லட்சக்கணக்கான மலர்கள் பூத்துக் குலுங்கின. காய்கறி, பழங்கள், பூக்களான 7 வடிவமைப்புகள் சுற்றுலா பயணிகளை கவர்ந்தன. மொத்தம் 9 நாள் நடந்த மலர் கண்காட்சியை 45 ஆயிரத்து 493 பேர் பார்வையிட்டுள்ளனர். இதன் மூலமாக ரூ. 33 லட்சத்து 27 ஆயிரம் வருவாய் கிடைத்தது. 2024ல் நடந்த மலர் கண்காட்சியை 45 ஆயிரத்து 400 பேர் பார்வையிட்ட நிலையில் ரூ. 32 லட்சத்து 35 ஆயிரம் வருவாயாக கிடைத்தது குறிப்பிடத்தக்கது.