உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ஒட்டன்சத்திரத்தில் 912 அடுக்கு மாடி குடியிருப்புக்கு அடிக்கல்

ஒட்டன்சத்திரத்தில் 912 அடுக்கு மாடி குடியிருப்புக்கு அடிக்கல்

ஒட்டன்சத்திரம்: நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் ஒட்டன்சத்திரம் நகராட்சி பகுதியில் ரூ.66.23 கோடி மதிப்பீட்டில் 480 அடுக்கு மாடி குடியிருப்புகள், கீரனூர் பேரூராட்சியில் ரூ.57.04 கோடி மதிப்பீட்டில் 432 அடுக்கு மாடி குடியிருப்புகளுக்கு சென்னையில் இருந்து காணொலி வாயிலாக தமிழக முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.இதைதொடர்ந்து ஒட்டன்சத்திரத்தில் நடந்த நிகழ்ச்சியில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி கலந்து கொண்டு பேசியதாவது:குடியிருப்பு பணிகள் 2026 பிப்ரவரிக்குள் முடிக்கப்பட்டு வீட்டின் உரிமையாளர்களுக்கு சாவிகள் ஒப்படைக்கப்படும். பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை மக்களுக்கும் விரைவில் அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் கட்டுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஏப்ரலுக்குள் ஒட்டன்சத்திரம் நகராட்சி பகுதியில் நபர் ஒருவருக்கு ஒரு நாளைக்கு 135 லிட்டர் குடிநீர் வழங்கப்படும். ரூ .33 கோடி மதிப்பீட்டில் ஒட்டன்சத்திரம் நகராட்சி பகுதியில் உள்ள அனைத்து வார்டுகளிலும் தார் சாலை போடப்படும். குப்பை இல்லாத நகராட்சியாக மாற்றுவதற்கு 12 நகராட்சிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதில் ஒட்டன்சத்திரம் நகராட்சியும் ஒன்று. இதற்காக 20 ஏக்கரில் நிலம் வாங்கப்பட்டு தினந்தோறும் குப்பை அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது. பஸ் ஸ்டாண்ட் பகுதியில் ரூ.15 கோடியில் நகரும் நடை மேம்பாலம் கட்டப்பட உள்ளது என்றார்.எம்.பி., சச்சிதானந்தம், திட்ட இயக்குனர் திலகவதி, நகராட்சி தலைவர் திருமலைச்சாமி, துணை தலைவர் வெள்ளைச்சாமி, தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு வாரிய உதவி நிர்வாக பொறியாளர் ஈஸ்வரி, நகராட்சி கமிஷனர் ஸ்வேதா, பொறியாளர் சுப்பிரமணிய பிரபு, பி.டி.ஓ.,க்கள் காமராஜ் வடிவேல் முருகன், தலைமை செயற்குழு உறுப்பினர் கண்ணன் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ