உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / நான்கு வழிச்சாலை, முக்கிய சாலையில் மின்விளக்கு...இல்லவே இல்லை: வழிப்பறி, திருட்டுக்கு வழி வகுப்பதால் மக்கள் அச்சம்

நான்கு வழிச்சாலை, முக்கிய சாலையில் மின்விளக்கு...இல்லவே இல்லை: வழிப்பறி, திருட்டுக்கு வழி வகுப்பதால் மக்கள் அச்சம்

திண்டுக்கல் மாவட்டம் தென் மாவட்டங்களின் நுழைவு பகுதியாக திகழ்கிறது. தொழில், வணிகம் அனைத்திலும் சிறந்து விளங்கும் மாவட்டத்தில் இருந்து பிற மாநிலங்களுக்கும், வெளி மாவட்டங்களுக்கும் சாலை வழி பஸ் போக்குவரத்து நடைபெறுகிறது. சேலம், கரூர், கோயம்புத்துார், தேனி, திருச்சி உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு தினசரியும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வணிக ரீதியாகவும், பொது போக்குவரத்தாகவும் சென்று வருகின்றன. இதற்காக மாவட்டத்தை சுற்றிலும் உள்ள சாலைகள் நான்கு வழி சாலைகளாகவும், மாநில நெடுஞ்சாலைகளாகவும் மாற்றப்பட்டுள்ளது. இந்த சாலைகளில் போதிய மின்விளக்கு வசதி இல்லாததால் திருட்டு, வழிப்பறி சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன. தேவையான இடங்களில் உயர் கோபுர மின் விளக்குகள் இல்லாததாலும், இருப்பவை சில இடங்களில் சரிவர பராமரிக்கப்படாமல் பழுதாகி கிடப்பதாலும் அப்பகுதிகளில் தொடர் இருள் நீடிக்கிறது. இது சட்டவிரோத செயல்களுக்கும் குற்றச் செயல்களுக்கும் வழி வகுப்பதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள், பொது போக்குவரத்தை பயன்படுத்துவோர் அச்சத்தில் உள்ளனர். நான்கு வழி சாலைகளையொட்டி உள்ள ஊர்களுக்கு இரவு நேரங்களில் பயணிப்போர் எப்போது எது நடக்குமோ என்ற அச்ச உணர்வை தாங்கி கொண்டே வீடு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. நான்கு வழி சாலை உள்ளிட்ட சாலைகளில் போதிய மின் விளக்கு வசதிகள் ஏற்படுத்தி பாதுகாப்பான பயணத்திற்கு வழி வகுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

R.MURALIKRISHNAN
செப் 30, 2025 17:39

அனைவருக்குமான அரசுன்னு சொன்னப்போ அர்த்தம் அப்போ தெரியல, இப்ப தெரியுதுப்பா


சுந்தரம் விஸ்வநாதன்
செப் 30, 2025 10:49

கோவையில் வீரகேரளம் பகுதியில் இருந்து காந்திபார்க் செல்லும் சாலையில் கடந்த மூன்று ஆண்டுகளில் இரவு நேரம் தெருவிளக்குகள் எரிந்து யாராவது பார்த்திருக்கிறீர்களா


R.MURALIKRISHNAN
செப் 30, 2025 17:37

ஆளும் கட்சியிடமும் சொன்னோம். இரவில் போய் பார்த்த பின் இருட்டா இருக்கு, விளக்கிருக்கான்னு தெரியலபான்டாங்க


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை