உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கொள்ளை முயற்சி வழக்கில் மேலும் நால்வர் கைது

கொள்ளை முயற்சி வழக்கில் மேலும் நால்வர் கைது

நத்தம்:திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சமுத்திராப்பட்டி ரியல் எஸ்டேட் அதிபர் அழகப்பன் வீட்டில் முகமூடி அணிந்து வந்து ஆயுதங்களுடன் கொள்ளையடிக்க முயன்ற வழக்கில் ஏற்கனவே மூவர் கைதான நிலையில் , அவரது கார் டிரைவர் உட்பட மேலும் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.சிறுகுடி சாலை ஊரணிக்கரையில் உள்ள வீட்டில் தாய் சொர்ணத்துடன் 70, அழகப்பன் 47, வசித்து வருகிறார். ஜூன் 16 இரவு இவரது வீட்டிற்குள் முகமூடி அணிந்து வந்த கும்பல் அழகப்பனின் கழுத்தில் கத்தியை வைத்து பணம் எங்கு உள்ளது என கேட்டு பீரோவை திறக்க கூறியது. நகை, பணம் இல்லாததால் ஆத்திரமடைந்த கும்பல் கத்தியால் குத்திவிட்டு தப்பியது. விசாரித்த நத்தம் இன்ஸ்பெக்டர் சிவராமகிருஷ்ணன் தலைமையிலான தனிப்படையினர் இச்சம்பவம் தொடர்பாக மேலுார்- குளத்துகரை பகுதியில் பதுங்கி இருந்த அதே பகுதியை சேர்ந்த பிரபாகரன் 29,சாந்தகுமார் 28, முத்துவெங்கடாஜலபதி 29, ஆகிய மூன்று பேரை கைது செய்தனர். இவர்களின் தகவல்படி ஆவிச்சிபட்டி பகுதியில் பதுங்கியிருந்த சிங்கம்புணரி காளாப்பூரை சேர்ந்த கார் டிரைவர் மணிமொழியன் 45, மேலுார் கொட்டக்குடியை சேர்ந்த பாக்கியராஜ் 39, கீழவயலை சேர்ந்த பாபு 41, நத்தம் எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்த பிரபாகரன் 60 ,ஆகியோரை கைது செய்தனர்.மேல் விசாரணையில் ,கைதான மணிமொழியன் அழகப்பனின் கார் டிரைவராக இருந்ததாகவும், அப்போது அவர் ரியல்எஸ்டேட் தொழிலில் வாங்கும் கமிஷன் தொகையை நோட்டமிட்டு வந்ததாகவும், இதில் ரூ. பல கோடி வீட்டில் இருப்பதாக மணிமொழியன் கொடுத்த தகவலில் இவர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ