உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  இலவச சைக்கிள் வழங்கும் விழா

 இலவச சைக்கிள் வழங்கும் விழா

நத்தம்: -நத்தம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் இலவச சைக்கிள் வழங்கும் விழா நடந்தது. பள்ளி தலைமையாசிரியை தமிழரசி தலைமை வகித்தார். முன்னாள் எம்.எல்.ஏ., ஆண்டி அம்பலம்,தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் ரத்தினக்குமார், பழனிச்சாமி, சேக் சிக்கந்தர்பாட்சா முன்னிலை வகித்தனர். 11-ம் வகுப்பு பயிலும் 411 மாணவிகளுக்கு சைக்கிள்கள் வழங்கப்பட்டது. மாநில பொதுக்குழு உறுப்பினர் முத்துக்குமார்சாமி,நகர அவைத் தலைவர் சரவணன், மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் சுந்தரமூர்த்தி கலந்து கொண்டனர். இதைப்போல் துரைக்கமலம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியிலும் 262 மாணவர்களுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கபட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ