உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / இலவச மணமாலை நிகழ்ச்சி

இலவச மணமாலை நிகழ்ச்சி

திண்டுக்கல், : திண்டுக்கல்லில் அனைத்திந்திய முதலியார், பிள்ளைமார் சங்கம் சார்பில் இலவச மணமாலை நிகழ்ச்சி நடந்தது.மாநில தலைவர் ராமசந்திரன் தலைமை வகித்தார். பொதுச்செயலர் ரகுராம், பொருளாளர் ரவி, துணைத் தலைவர் குழந்தைவேலு முன்னிலை வகித்தனர். ஆயிரத்திற்கும் மேலானோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்று தங்கள் குழந்தைகளுக்கு ஏற்ற வரன்களை தேர்வு செய்தனர். அமைப்புச் செயலர்கள் வேலம்மாள், மகளிரணி தலைவி திலகவதி, செயலர் உமாவாசன், ஒருங்கிணைப்பாளர்கள் அருணாச்சலம், ஜெயக்குமார், கண்ணன், பாலசுப்பிரமணி, சிவகுமார், மகாலட்சுமி, மேயர் இளமதி ஜோதிபிரகாஷ், முன்னாள் மேயர் மருதராஜ், திண்டுக்கல் அனைத்து பிள்ளைமார் பெருமக்கள் பேரவை தலைவர் சந்திரன், செயலர் பாஸ்கரன், வேலு மஹால் பழனிசாமி, எஸ்.கே.சி., சண்முகவேலு, காந்திஜி பள்ளி தாளாளர் பத்மநாபன் பங்கேற்றனர்.திண்டுக்கல் மாவட்ட தலைவர் கர்னல் வீரமணி, கவுரவ தலைவர் சிவசண்முகராஜன், துணைத்தலைவர் பழனிவேல்ராஜ், செயலர் ராஜேஸ்வரன், பொருளாளர் சின்னச்சாமி, ஒருங்கிணைப்பாளர்கள் பாலசுப்பிரமணி, பரமசிவம், கோபிநாத், பிரகாஷ், ராஜா ஆகியோர் ஏற்பாடுகளை செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை