விநாயகர் சதுர்த்தி ஆலோசனை கூட்டம்
திண்டுக்கல் : திண்டுக்கல்லில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை அமைதியான முறையில் நடத்துவது தொடர்பாக போலீஸ், ஹிந்து அமைப்பினர் பங்கேற்ற ஆலேசானைக்கூட்டம்நடந்தது. டவுன் டி.எஸ்.பி., கார்த்திக் தலைமையில் நடந்த இதில் இன்ஸ்பெக்டர்கள் வெங்கடாசலபதி, ராஜசேகர், வினோதா, சிவசேனா மாநிலத்தலைவர் பாலாஜி, ஹிந்து மக்கள் கட்சி தர்மா, ஹிந்து தர்மசக்தி பாரத் சேனா உட்பட பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.விநாயகர் சதுர்த்தி வழிபாடு, ஒலிபெருக்கி, சுழற்சி அடிப்படையில் பொறுப்பாளர்களை நியமிப்பது, ஊர்வலத்தை பாதிப்பு இல்லாதவாறு நடத்த ஆலோசனை வழங்கப்பட்டது.