உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பழநியில் விநாயகர் சிலைகள் தயார்

பழநியில் விநாயகர் சிலைகள் தயார்

பழநி: பழநி சுற்றுப்பகுதிகளில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அமைக்கப்பட உள்ள விநாயகர் சிலைகள் தயாராகி வருகின்றன. ஆக. 27 ல் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளது. அதனை முன்னிட்டு விநாயகர் ஊர்வலங்கள் பழநி நகரில் நடைபெறும். இதற்கான விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணிகள் பழநி பகுதியில் நடைபெற்று வருகின்றன. ஒன்றரை அடி முதல் பத்தரை அடி வரை உயரம் உள்ள சிலைகள் தயாராகின்றன. காகித கூழ் ,மாவு பொருட்களால் தயாரான விநாயகர்களுக்கு வர்ணம் பூசும் பணிகள் துவங்கி உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை