உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / திருநங்கையை அரிவாளால் வெட்டிய கும்பல்

திருநங்கையை அரிவாளால் வெட்டிய கும்பல்

நத்தம்: -நத்தம் அருகே திருநங்கையை அரிவாளால் வெட்டிய தம்பி அமர்நாத் உள்ளிட்டோரை போலீசார் தேடுகின்றனர். நத்தம் காந்திநகரை சேர்ந்த ஆறுமுகம் கீதா தம்பதிக்கு மணிகண்டன், அமர்நாத் 25 ,என இரு மகன்கள் உள்ளனர். மணிகண்டன் 12 வருடங்களுக்கு முன்பு உடல் மாற்றம் காரணமாக திருநங்கையாக மாறினார். பின்னர் வீட்டை விட்டு வெளியேறினார். தனது பெயரை சமந்தா என மாற்றி தென்காசி பகுதியில் திருநங்கைகளோடு வசித்து வருகிறார். இன்ஸ்டாகிராமில் தனது ரீல்ஸ் வீடியோக்களை பதிவு செய்து வந்துள்ளார். இதை பார்த்த சமந்தாவின் தம்பி அமர்நாத் இன்ஸ்டாகிராமில் பின் தொடர்ந்தார். இதை தொடர்ந்து தம்பிக்கு பண உதவிகளும் சமந்தா செய்து வந்தார். இதனிடையே நத்தம் பகுதியில் நடந்த ஒரு விசேஷ நிகழ்ச்சிக்கு சமந்தா வந்தார். அப்போது தாய், தந்தையுடன் சேர்த்து வைப்பதாக அமர்நாத் கூறி உள்ளார். நண்பர்களுக்கும் அறிமுகம் செய்து வைத்துள்ளார். அங்கு சமந்தாவை அரிவாளால் சிலர் வெட்டி விட்டு தப்பினர் . திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தனது தம்பி அமர்நாத்,உறவினர்களால் தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், தன்னை கொடூர முறையில் தாக்கிய தம்பி மீது நடவடிக்கை எடுக்க நத்தம் போலீசில் சமந்தா புகார் செய்துள்ளார். நத்தம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ