தடுக்கலாமே...: நீர் ஆதாரங்களில் குவியும் குப்பை, கழிவு நீர் : துறை நடவடிக்கை இல்லாது தொடரும் அவதி
பழநி: திண்டுக்கல் மாவட்டத்தில் குளங்கள்,கண்மாய்,ஆறுகள் உள்ளிட்ட நீர் ஆதாரங்களில் குப்பை கொட்டுவதை தடுப்பதோடு இதில் கழிவு கழிவுநீர் கலப்பதையும் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்டத்தில் பெரும்பாலான நகர் பகுதிகளில் உள்ள சாக்கடை கழிவு நீர் குளம்,ஆறு உள்ளிட்ட நீர் ஆதாரங்களில் கலப்பது போன்ற அமைப்பு உள்ளது. இதனால் குளங்களில் இருந்து பாசனத்திற்கு பயன்படுத்தும் போது விளைநிலங்களில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. நிலங்களில் இறங்கி வேலை செய்யும் விவசாயிகளுக்கு நோய் தொற்று , தோல் வியாதிகள் ஏற்படுகின்றன. இதை தடுக்க விடுதிகள், திருமண மண்டபங்கள் உள்ளிட்ட நிறுவனங்களில் பயோ டாய்லெட் முறையை அமல்படுத்தினால் இந்நிலையை தவிர்க்கலாம். மேலும் சாக்கடை நீர் கலக்கும் வழித்தடங்களை கண்டறிந்து அதனை முறையாக சுத்திகரிப்பு செய்து நன்னீராக மாற்றி நீர் நிலைகளில் கலக்க துறையினர் முன்வர வேண்டும். இதன் மூலம் நிலத்தடி நீர் , விவசாய நிலங்களை காக்க முடியும். ........... பாதிப்பை சந்திக்கிறோம் மாவட்டம் முழுவதும் போதி மழை இல்லை. இதனால் தீவன பற்றாக்குறை ஏற்படுகிறது. குளத்தின் நீரை பெரும்பாலான விவசாயத்திற்கு பயன்படுத்தி வருகிறோம். ஆனால் சாக்கடை நீர் குளங்களில் கலக்கிறது. இதோடு குப்பையும் கொட்டப்படுகின்றன. நகர் மட்டுமன்றி பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளிலும் இதே நிலைதான் உள்ளது. குளங்களில் சாக்கடை நீர் கலப்பது மட்டுமில்லாமல் நதிகளிலும் சாக்கடை நீர் கலப்பதால் அதிக பாதிப்பு ஏற்படுகிறது. சுப்பிரமணியன், விவசாயி, பழநி.