மேலும் செய்திகள்
ரூ.1.99 கோடியில் ஊராட்சிகளுக்கு டிப்பர் லாரி
23-Oct-2024
மாவட்டத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை பெய்து வருவதால் அணைகள் உள்ளிட்ட நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன.நிறைந்த நீர் நிலைகளிலிருந்து உபநீர் வெளியேற்றப்படுகிறது. இதன் நீர் செல்லும் ஆறுகள் , ஓடைகளில் நகர, கிராம பகுதியில் உள்ள சாக்கடை கழிவு நீர் இணைக்கப்படுவதால் நீர் நிலைகள் முற்றிலும் மாசுபடுகிறது. மழைக்காலங்களில் சேமிக்கப்படும் நீர் நிலத்தடி நீர்மட்டத்தை அதிகரிக்கும் நிலையில் கழிவுநீர் கலப்பதாலும், உள்ளாட்சி அமைப்புகளின் குப்பையை கொட்டுவதாலும் நிலத்தடி நீரும் மாசடைகிறது.இதனால் நோய் தொற்று அபாயம் ஏற்படுகிறது. இதனை கட்டுப்படுத்த உள்ளாட்சி அமைப்புகளுக்கு குப்பை கொட்ட தனி இடம் அமைக்க வேண்டும். மேலும் குளம் உள்ளிட்ட நீர்நிலைகளில் கழிவு நீர் கலப்பதை தடுக்க மாவட்ட நிர்வாகம் போதிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
23-Oct-2024