மேலும் செய்திகள்
சங்க பொதுக்குழு கூட்டம்
07-Jul-2025
திண்டுக்கல் : திண்டுக்கல் பலசரக்கு, நவதானியங்கள் சங்க பொதுக்குழு கூட்டத்தில் அடுத்த 3 ஆண்டுகளுக்கான நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள் தேர்வு நடந்தது. தலைவராக ராஜேந்திரன், முதுநிலைத்தலைவராக சுந்தரராஜன், செயலாளராக செல்லக்கண்ணன், பொருளாளராக ராஜேந்திரன், கவுரவ ஆலோசகராக தர்மராஜன், துணைத்தலைவர்களாகஅழகேசன், காந்திராஜன், இணைச்செயலர்களாக ரவிச்சந்திரன் நியமிக்கப்பட்டனர். மாநகராட்சியில் வணிக ரீதியிலான சொத்துக்களுக்கு பிற மாநகராட்சிகளை காட்டிலும் அதிகளவில் சொத்துவரி விதிக்கப்படுவதற்கு கண்டனம், வணிக ரீதியான மின்கட்டணம் குறைக்க வேண்டும் உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
07-Jul-2025