உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / தடையை மீறி கூம்பு ஒலி பெருக்கிகள் பயன்பாடு தாராளம்

தடையை மீறி கூம்பு ஒலி பெருக்கிகள் பயன்பாடு தாராளம்

பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் வாகனங்களில் குறிப்பிட்ட அளவு டெசிபல் ஒலி எழுப்பும் பாக்ஸ் ரக ஒலிபெருக்கிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற கட்டுப்பாடு உள்ளது. 23 ஆண்டுகளுக்கு முன் அதிக ஒலி மாசு ஏற்படுத்துவதாக இவற்றின் மீது தடை விதிக்கப்பட்டது. ஆனால் கோயில் விழாக்கள் ,பொது நிகழ்ச்சிகள் மட்டுமின்றி அரசு விழாக்களிலும் இவற்றின் கட்டுப்பாடற்ற பயன்பாடு தாராளமாக பெருகி வருகிறது. அளவிற்கு மீறிய கூம்பு வடிவ, பாக்ஸ் ரக ஒலிபெருக்கிகள், சம்பந்தப்பட்ட பகுதிகளில் குடியிருப்போர் மட்டுமின்றி வாகனங்களில் செல்வோர், பாதசாரிகள் பாதிப்பிற்குள்ளாகும் நிலை அதிகரித்து வருகிறது. இவை தவிர பள்ளி, கல்லுாரி, வழிபாட்டு தலங்கள் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பகுதிகளிலும் இவற்றின் உபயோகத்தை கட்டுப்படுத்த முடியாத அவலநிலையும் உள்ளது.இவற்றின் பயன்பாடு மூலம் காது கேளாமை, தடுமாற்றத்தால் விபத்துக்கள், இதய நோய் பாதிப்படையோரை அவதிக்குள்ளாக்கும் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். இப்பிரச்னை தொடர்பாக சமூக ஆர்வலர்கள் பலர் நீதிமன்றம் மூலம் தீர்வு காண முயன்றனர். இதில் கட்டுப்பாடுகளை வலியுறுத்தி உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு உள்ளன. இருப்பினும் இதனை செயல்படுத்துவதில் போலீஸ், வருவாய் உள்ளிட்ட துறை அதிகாரிகள் அரசியல், செல்வாக்கு, கவனிப்பு போன்றவற்றால் அலட்சியமாக உள்ளனர். இதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

மூர்க்கன்
ஜூன் 02, 2025 22:06

கோடி அழுக்கை உங்க பக்கம் வச்சுக்கிட்டு எந்த தகுதில அடுத்தவனுக்கு புத்தி சொல்ல வந்தீங்க மூட பசங்களா??


மூர்க்கன்
ஜூன் 02, 2025 22:04

ஏம்பா ஷங்கர் ரவி ஒரு ஐஞ்சு கூட இல்ல ரெண்டே ரெண்டு நிமிஷம் தொழுகைக்கு அழைப்பது அவ்வளவு கஷ்டம்னா இங்கே அவனவன் நடு ராத்திரி பன்னென்டு மணி வரைக்கும் ஆடல் பாடல் கூத்து கும்மாளம் அடிக்கிறான் கோவில் பேருல . அப்போ நாங்கெல்லாம் எவ்வளவு பாவம்.


மூர்க்கன்
ஜூன் 02, 2025 22:01

சீனு திரைப்படத்தில் சின்ன கலைவாணர் அவர்கள் இவர்களுக்கு விளக்கமாக பாடம் எடுத்து இருப்பார் ஆனாலும் திருந்தலையே மாம்ஸ்.


Shankar Ravi
ஜூன் 02, 2025 12:24

நான் ஆன்மீகத்தில் தீவிர உள்ள நபர் கடந்த 15 வருடங்களுக்கு மேல் தியானம் செய்து வருகிறேன். மோகப்பாரில் வசிக்கிறேன். நான் மிகுந்த துன்பத்தில் உள்ளேன். விடியற் காலையில் என்னால் தியானம் பழக முடியாமல் உள்ளேன். என்னை போன்றவர்கள் மசூதிகள் அருகில் வசிப்பது மிக சிரமமாக உள்ளது.


மூர்க்கன்
ஜூன் 02, 2025 21:58

அதை விட அதிகமாக கோவில் பக்கம் உள்ளவர்கள் நிலைமை மிக மோசம் என்பது எல்லோருக்குமே தெரியும்.


மூர்க்கன்
ஜூன் 02, 2025 22:00

எந்திரன் படத்தில் கூட அருமையாக இந்த கொடுமையை காட்சி படுத்தி இருப்பார்கள்.


மூர்க்கன்
ஜூன் 02, 2025 22:09

மசூதி பற்றி சொல்ல எந்த அருகதையும் இல்லாத அரைவேக்காடு இதுல ஆன்மீக ஈடுபடாம் . வெறி பிடித்த மிருகம் முதல்ல மனுஷ ஜென்மமா மாறு? அப்புறம் ஆன்மிகம் தியானம் எல்லாம் போகலாம்.


xxxx
ஜூன் 02, 2025 07:05

விடிய விடிய பாடல் போட்டாலும் யாரும் கேட்க மாட்டார்கள் .....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை