பக்தர்களுக்கு ஒளிரும் குச்சிகள்
பழநி: பழநி பாதயாத்திரை வரும் பக்தர்களுக்கான ஒளிரும் குச்சிகளை கோயில் நிர்வாகம் போலீசாரிடம் வழங்கியது. பழநி பாதயாத்திரையாக ஏராளமான பக்தர்கள் வருகை புரிகின்றனர். மாலை நேரங்களில் சாலைகளில் வரும் வாகனங்கள் அறிந்து கொள்ளும் வகையில் ஒளிரும் ஸ்டிக்கர்கள் ஒட்டிய குச்சிகள் எடுத்து வர பக்தர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் விபத்துகள் குறையும். இந்நிலையில் பழநி கோயில் நிர்வாகம் சார்பில் பத்தாயிரம் ஒளிரும் ஸ்டிக்கர்கள் ஒட்டிய குச்சிகளை கோயில் உதவி கமிஷனர் லட்சுமி போலீசாரிடம் வழங்கினார்.