வடகாட்டான் சுவாமிக்கு ஆடுகள் வெட்டி படையல்
நத்தம் : குட்டுப்பட்டி லெட்சுமணபுரம் வடகாட்டான் சுவாமி கோயிலில் ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் ஆடி படையல் விழா நடந்தது. இதையொட்டி வடகாட்டான் சுவாமிக்கு பூமலர்களால் சிறப்பு அலங்காரம் செய்ய அபிஷேகம், தீபாராதனை, பூஜைகளும் நடந்தது. தொடர்ந்து பக்தர்கள் நேர்த்திக்கடனாக கொடுத்த 40 -க்கு மேற்பட்ட ஆடுகள் கிராமத்தார்கள் மூலம் வெட்டப்பட்டு சுவாமிக்கு படையல் போடபட்டது. இதன் பின் 30 சிப்பம் அரிசியை கொண்டு 10 -க்கு மேற்பட்ட அண்டாக்களில் சாதம் தயார் செய்யப்பட்டு அன்னதானம் வழங்கப்பட்டது. சுற்று கிராம பகுதிகளை சேர்ந்த ஏராளமான ஆண்கள் கலந்து கொண்டனர்.