உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி

இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி

திண்டுக்கல்: விபத்தில் இறந்தவர் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது. திண்டுக்கல் கொட்டபட்டியை சேர்ந்த கூலி தொழிலாளி ரமேஷ் 35. தாராபுரம் பஸ் ஸ்டாண்ட் பிளாட்பாரத்தில் 2021 செப்டம்பரில் துாங்கிகொண்டிருந்தார். அங்கு வந்த அரசு பஸ் மோதியதில் ரமேஷ் இறந்தார். இவரின் மனைவி ஜெயசித்ரா திண்டுக்கல் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் இழப்பீடு கோரி வழக்கு தாக்கல் செய்தார். ஜெயசித்ராவுக்கு ரூ.23 லட்சத்து 84 ஆயிரத்து 200 ஐ வட்டியுடன் செலுத்த தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது . ஆனால் இழப்பீடு வழங்கவில்லை. இதனால் ஜெயசித்ரா மீண்டும் திண்டுக்கல் நீதிமன்றத்தில் நிறைவேற்றுதல் மனு தாக்கல் செய்தார். விசாரித்த நீதிபதி வேல்முருகன், அரசு போக்குவரத்துக்கழக பஸ்சை ஜப்தி செய்ய உத்தரவிட்டார். அதன்படி திண்டுக்கல் பஸ்ஸ்டாண்டில் நின்ற அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை