உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு அரணாகும் அரசு அமைச்சர் பெரியசாமி பேச்சு

சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு அரணாகும் அரசு அமைச்சர் பெரியசாமி பேச்சு

சித்தையன்கோட்டை : 'சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு அரணாக தி.மு.க., அரசு உள்ளது' என, அமைச்சர் பெரியசாமி பேசினார். ஆத்தூர், சித்தையன்கோட்டை பேரூராட்சியில், கோரிக்கை மனு பெறும் நிகழ்ச்சி நடந்தது. பெரிய பள்ளிவாசல் முத்தவல்லிகள் உதுமான்அலி, ஷேக்தாவுத் தலைமை வகித்தனர். மாவட்ட சிறுபான்மையின அணி துணை அமைப்பாளர் செல்லமரைக்காயர் வரவேற்றார். கோரிக்கை மனுக்களை பெற்ற அமைச்சர் பெரியசாமி பேசுகையில், 'தமிழகத்தில் இஸ்லாமிய சமுதாய மக்கள் பாதிக்கப்படும்போது, முதல் குரலாக தி.மு.க., முன்னின்று செயல்பட்டு உள்ளது. தற்போது வரை, சிறுபான்மையின மக்களுக்கு பாதுகாப்பு அரணாக இந்த அரசு செயல்பட்டு வருகிறது. இங்கு பெறப்பட்டுள்ள கோரிக்கை மனுக்கள் மீது, துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு விரைவில் தீர்வு காணப்படும். இப்பகுதிக்கு தேவையான அடிப்படை வசதிகள் உள்ளிட்ட அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.தி.மு.க., தலைமை செயற்குழு உறுப்பினர் நடராஜன், பேரூராட்சிகள் உதவி இயக்குனர் ராஜா, தாசில்தார் முத்துமுருகன், பி.டி.ஓ., தட்சிணாமூர்த்தி, பேரூராட்சி செயல் அலுவலர் ஜெயமாலு, தலைவர் போதும் பொண்ணு முரளி, துணைத்தலைவர் ஜாகிர்உசேன் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ