உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ஆளுநர் விருது தேர்வு முகாம்

ஆளுநர் விருது தேர்வு முகாம்

நெய்க்காரபட்டி: பழநி நெய்க்காரப்பட்டி குருவப்பா மேல்நிலைப்பள்ளியில் சாரண, சாரணியர்கள் மாநில ஆளுநர் விருதுக்கான தேர்வு முகாம் நடந்தது. 143 சாரணர்கள், 142 சாரணியர்கள் கலந்து கொண்டு தேர்வு எழுதினர். முதன்மை தேர்வராக சாரணர்களுக்கு கிருஷ்ணமூர்த்தி, சாரணியருக்கு திலகவதி செயல்பட்டனர். நிறைவு விழாவில் பள்ளி செயலர் ராஜ்குமார், பள்ளிக்குழு உறுப்பினர்கள் ராஜாகவுதம், சினேகிதா, தலைமை ஆசிரியை கல்பனா, இணைச்செயலாளர் சிலம்புசெல்வி, பழநி பாரத சாரண, சாரணிய இயக்க செயலாளர் மாசிலாமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !