உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பள்ளியில் பட்டமளிப்பு விழா

பள்ளியில் பட்டமளிப்பு விழா

ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரம் அக் ஷயா அகாடமி சி.பி.எஸ்.இ., பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு விழா நடந்தது.மாணவர்கள் தர்ஷிகா, டேனியல் வரவேற்றனர். பள்ளி நிர்வாகி புருஷோத்தமன் தலைமை வகித்தார். தாளாளர் சுந்தராம்பாள், செயலாளர்கள் மங்கள்ராம், காயத்ரி மங்கள்ராம் முன்னிலை வகித்தனர்.பள்ளியின் முன்னாள் மாணவர் ராஜேஷ் சவுந்தரராஜ் மழலையர்களுக்கு பட்டங்களை வழங்கி பேசினார். பள்ளியின் செயலாளர் பட்டாபிராமன் நினைவுப் பரிசு வழங்கினார். பள்ளி முதல்வர் சவும்யா நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்தார். மாணவிகளின் பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது. ஒருங்கிணைந்த சிறப்புக்குழு நடனம் நடந்தது. மாணவர்கள் ப்ரீத்தி, எஸ்தர் நன்றி கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ