உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கூட்டு குடிநீர் கேட்டு கிராம சபை புறக்கணிப்பு; சுகாதாரமற்ற நீரை பயன்படுத்துவதாக வேதனை

கூட்டு குடிநீர் கேட்டு கிராம சபை புறக்கணிப்பு; சுகாதாரமற்ற நீரை பயன்படுத்துவதாக வேதனை

வத்தலக்குண்டு: மல்லணம்பட்டி ஊராட்சியில் கூட்டுக் குடிநீர் திட்டம் கேட்டு கிராம சபை கூட்டத்தை புறக்கணித்த பொதுமக்கள் சுகாதாரமற்ற நீரை பயன்படுத்துவதாக வேதனை தெரிவித்தனர். மல்லணம்பட்டி ஊராட்சியின் தாய் கிராமமான மல்லணம்பட்டியில் 1500 குடும்பங்கள் உள்ளன. இந்த கிராமத்திற்கு கூட்டுக் குடிநீர் திட்டம் கொண்டு வர பொதுமக்கள் நீண்ட காலமாக வலியுறுத்தி வந்தனர். இதுநாள் வரை திட்டம் கொண்டுவரவில்லை. அங்குள்ள குடிநீர் மேல்நிலைத் தொட்டி இடிக்கப்பட்டு 20 மாதங்கள் ஆன நிலையில் புதிதாக தொட்டியும் கட்டவில்லை. ஊர் கிணற்றில் உள்ள சுகாதாரமற்ற தண்ணீரை பயன்படுத்துவதால் நோய் தொற்று ஏற்படுவதாக கூறி கிராம சபையை புறக்கணித்தனர். ஊராட்சி நிர்வாகம் பணித்தள பொறுப்பாளர்கள், சுகாதாரப் பணியாளர்களை வைத்து கிராம சபை கூட்டத்தை நடத்தின.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ