உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / தாத்தா, பாட்டியை தாக்கி நகை பறித்த பேரன் கைது

தாத்தா, பாட்டியை தாக்கி நகை பறித்த பேரன் கைது

எரியோடு:எரியோடு அருகே மூகமுடி அணிந்து வந்து, தாத்தா, பாட்டியை தாக்கி நகை பறித்த பேரன் உட்பட இருவரை போலீசார் கைது செய்தனர்.திண்டுக்கல் மாவட்டம், எரியோடு அருகே, மாரம்பாடி கணக்கனுார் களத்துவீட்டில் வசிப்பவர் வேளாங்கண்ணி ஆரோக்கியம், 70. இவரது மனைவி கேத்தரின்மேரி, 64. இவர்களின் மகன்கள் இருவரும் திருமணமாகி தனியே சென்றனர். ஏப்., 19 இரவு, 8:00 மணிக்கு முகமூடி அணிந்து வந்த இருவர், தம்பதியை குச்சியால் தாக்கியும், கத்தியால் குத்தியும், கேத்தரின்மேரி அணிந்திருந்த 5 சவரன் செயினை பறித்து சென்றனர். எரியோடு போலீசார் நடத்திய விசாரணையில், தம்பதிக்கு பேரன் உறவு முறையான பெரிய குளத்துப்பட்டி அருண்குமார், 32, அவரது நண்பர் பிரபு, 30, இச்சம்பவத்தில் ஈடுபட்டது தெரிந்தது. தொடர்ந்து, அவர்கள் இருவரையும் நேற்று கைது செய்தனர். அருண்குமார் மீது ஏற்கனவே பல வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை