பசுமை பூங்கா திறப்பு
திண்டுக்கல் : உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் சார்பில் மரக் கன்றுகள் உற்பத்திக்கான விதை நடும் பணி நடைபெற்றது. கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இதற்கு கலெக்டர் சரவணன் தலைமை வகித்தார். மரக் கன்று வளர்ப்புக்காக 100 மக்கும் தன்மை கொண்ட நெகிழிப் பைகள் பயன்படுத்தப்பட்டன. இதில் புளி, வேம்பு, புங்கன் விதைகள் 500 பைகளில் நடப்பட்டன. டி.ஆர்.ஓ., ஜெயபாரதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.மாவட்ட மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் பிளாஸ்டிக் பொருள்களை உண்ணும் கால்நடைகள் பாதிக்கப்படுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் பொருள்களால் உருவாக்கப்பட்ட காளையை கலெக்டர் திறந்து வைத்தார்.இது போல் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அலுவலகம் அருகே அமைக்கப்பட்டிருந்த பசுமைப் பூங்காவையும் திறந்து வைத்தார்.