நிலக்கடலை சாகுபடி செயல் விளக்கம்
ஆயக்குடி: பழநி ஆயக்குடியில் தமிழ்நாடு வேளாண் பல்கலை, வாகரை மக்காச்சோள ஆராய்ச்சி நிலையம், இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம் சார்பில், நடந்த வயல் விழாவில், 'நிலக்கடலை சாகுபடியில் முதல் நிலை செயல் விளக்கம்', நடந்தது. ஒருங்கிணைந்த பண்ணை திட்ட அலுவலர் சதீஷ்குமார் தலைமை வகித்தார். நிகழ்வில் பயிர் இடைவெளி, விதை நேர்த்தி, தகுந்த கால இடைவெளியில் உரம் இடுதல், களை எடுத்தல், களைக் கொல்லி தெளிப்பது ஏன் அவசியம் என்பன உள்ளிட்ட ஆலோசனைகள் எடுத்துரைக்கப் பட்டன. இளநிலை வேளாண் அலுவலர் பாடலீஸ்வரர், உதவி வேளாண் அலுவலர் பாண்டியராஜன், விவசாயிகள் பங்கேற்றனர்.