நால்வருக்கு குண்டாஸ்
பழநி: பழநி குபேர பட்டினத்தை சேர்ந்த நவநீதன் 25, ஆக.,19 ல் பெரியப்பா நகர் குப்பை கிடங்கு அருகே கழுத்து வெட்டப்பட்டு கொல்லப்பட்டார். கணபதி நகரை சேர்ந்த அஜித்குமார் 29,தேரடியை சேர்ந்த ஆதித்யா 27, டாக்டர் கோபாலன் தெருவை சேர்ந்த ராகுல் தேவ் 34, இந்திரா நகர் வ.உ.சி தெருவை சேர்ந்த சுதாகர் 33, ஆகியோரை பழநி டவுன் போலீசார் கைது செய்தனர். இதில் ராகுல்தேவ்,சுதாகர், ஆதித்யா, அஜித்குமார் ஆகியோர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க எஸ்.பி., பிரதீப் பரிந்துரையில் கலெக்டர் சரவணன் உத்தரவிட்டார்.