உள்ளூர் செய்திகள்

கையெழுத்து இயக்கம்

திண்டுக்கல், ஆக.15 வைகை அணையில் இருந்து குழாய்கள் மூலம் திண்டுக்கல் மாநகராட்சிக்கு குடிநீர் வழங்கும் புதிய திட்டத்தை அமுல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி மா.கம்யூ., சார்பில் பொதுமக்களிடம் கையெழுத்து பெறும் இயக்கம் துவக்க நிகழ்ச்சி மணிக்கூண்டில் நடந்தது. எம்.பி., சச்சிதானந்தம், மாவட்ட செயலாளர் பிரபாகரன் துவக்கி வைத்தனர். மாநகர செயலாளர் அரபு முகமது  தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆசாத், முத்துச்சாமி, மாவட்ட குழு உறுப்பினர்கள் கணேசன், கவுன்சிலர்கள் மாரியம்மன், ஜோதிபாசு உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாநகர் குழு உறுப்பினர் கிருஷ்ணன் நன்றி தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி