உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கொடைக்கானலில் சாரல் மழையுடன் பனி மூட்டம் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கொடைக்கானலில் சாரல் மழையுடன் பனி மூட்டம் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கொடைக்கானல்:கொடைக்கானலில் அடர் பனிமூட்டத்துடன்சாரல் மழை பெய்ததால் இயல்பு வாழ்க்கை பாதித்தது.சுற்றுலாத்தலமான கொடைக்கானலில் சில வாரங்களாக வறண்ட வானிலையுடன் உறை பனியின் தாக்கம் இருந்தது. வானம் மேகமூட்டத்துடன் காண பனியின் தாக்கம் சற்று தணிந்தது. இதனிடையே நேற்று காலை முதல் நகரை பனிமூட்டம் சூழ்ந்தது. சாரல் மழையுடன் பனிமூட்டமும் மாலை வரை நீடித்தது. வாகனங்கள் முகப்பு விளக்கை எரிய விட்டு சென்றன. பொங்கல் தொடர் விடுமுறையில் மலை நகரில் முகாமிட்டிருந்த சுற்றுலா பயணிகள் நேற்று நிலவிய சீதோஷ்ண நிலையால் விடுதிகளிலே முடங்கினர். இங்குள்ள முக்கிய சுற்றுலா தலங்கள் பயணிகள் வரத்தின்றி வெறிச்சோடி காணப்பட்டது. காற்றில் ஈரப்பதம் அதிகரித்து குளிர் நிலவியது. மாலையில் சாரல் மழையையும் பொருட்படுத்தாமல் ஏரி சாலையில் குதிரை, சைக்கிள், ஏரியில் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். வழக்கத்திற்கு மாறான சீதோஷ்ண நிலையால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்அடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை