உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / மலைப் பகுதிகளில் தலைதுாக்கும் திருட்டுக்கள்: கண்டுகொள்ளாத போலீஸ்

மலைப் பகுதிகளில் தலைதுாக்கும் திருட்டுக்கள்: கண்டுகொள்ளாத போலீஸ்

தாண்டிக்குடி : தாண்டிக்குடி மலைப்பகுதியில் மீண்டும் திருட்டு சம்பவங்கள் தலை துாக்க துவங்கி உள்ளன. தாண்டிக்குடி போலீஸ் ஸ்டேஷன் எல்லை பகுதிகளில் 50க்கு மேற்பட்ட உட்கடை கிராமங்கள் உள்ளன. இங்கு விவசாயமே பிரதானமாக உள்ளது.சமீபமாக விவசாய விளைபொருட்கள் ,விவசாய தளவாடப் பொருட்கள், சூரிய ஒளி பேனல் உள்ளிட்டவை மாயமாகி வருகிறது. சமீபத்தில் பண்ணைக்காட்டில் கோயில் உண்டியல் உடைப்பு, தாண்டிக்குடி மேல் பஸ் ஸ்டாப் பகுதியில் கடையை உடைத்து திருட முயற்சி நடந்தது. சில ஆண்டுகளுக்கு முன் இம்மலைப் பகுதியில் தொடர் திருட்டு சம்பவங்கள் அரங்கேறி பொதுமக்கள் அச்சமடைந்தனர். தற்போது மீண்டும் மெல்ல மெல்ல மலைப்பகுதியில் இது போன்ற அசாதாரண நிலை தலைதுாக்கி வருகிறது. திருட்டு குறித்து புகார் அளிக்கும் நிலையில் போலீசார் மெத்தனப் போக்கை கடைபிடிக்கின்றனர். சமூக விரோத செயல்களும், கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதை வஸ்துகளும் தாராள புழக்கத்தில் உள்ளது. இதை கண்காணிக்க வேண்டிய போலீசார் ஆழ்ந்த உறக்கத்தில் உள்ளனர். மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி