உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பூங்கா நிலத்தை மீட்க வழக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

பூங்கா நிலத்தை மீட்க வழக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

திண்டுக்கல்: திண்டுக்கல் பிரபாகரன், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு: திண்டுக்கல் மாநகராட்சி வார்டு 1 ஆர்.எம்.காலனியில் வீட்டுவசதி வாரியம் சார்பில் 1992 ல் பிளாட்கள் உருவாக்கப்பட்டன. அப்போது 7972 ச.மீ.,நிலம் சிறுவர்கள் பூங்காவிற்கு ஒதுக்கப்பட்டது. அந்நிலத்தை இதுவரை மாநகராட்சி நிர்வாக பராமரிப்பிற்காக ஒப்படைக்கவில்லை. தற்போது 3252 ச.மீ.,நிலம்தான் உள்ளது. 7972 ச.மீ.,பரப்பு நிலத்தை மீட்டு பயன்பாட்டிற்கு கொண்டுவர உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். நீதிபதிகள் அனிதா சுமந்த், சி.குமரப்பன் அமர்வு விசாரித்தது. மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் சர்வாகன் பிரபு ஆஜரானார். மாநகராட்சி கமிஷனர், டி.ஆர்.ஓ., வீட்டுவசதி வாரிய செயற்பொறியாளருக்கு நோட்டீஸ் அனுப்பி நவ.24 ல் பதில் மனு தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி