உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / டாஸ்மாக் தடை வழக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

டாஸ்மாக் தடை வழக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

குஜிலியம்பாறை : கரூர் மாவட்டம் பெரியமஞ்சுவளி ராஜேந்திரன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:கூம்பூரில் டாஸ்மாக் கடை உள்ளது. மது வாங்க வருவோர் கரூர்- திண்டுக்கல் ரோடு, கூம்பூர்- காசிபாளையம் ரோடு, விவசாய நிலத்திற்கு செல்லும் பாதையில் வாகனங்களை நிறுத்தி இடையூறு ஏற்படுத்துகின்றனர். நாகுலுபட்டி பிரிவிற்கு மாற்ற முயற்சிக்கப்படுகிறது. அருகில் கோயில்கள், பள்ளிகள் உள்ளன. மது அருந்துவோரால் இடையூறு ஏற்படும். திண்டுக்கல் கலெக்டருக்கு புகார் அனுப்பினேன். கூம்பூரில் கடையை மூட வேண்டும். நாகுலுபட்டி பிரிவில் டாஸ்மாக் கடை அமைக்க தடை விதிக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், ஏ.டி.மரியா கிளீட் அமர்வு: மனுவை கலெக்டர் பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை