உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கிராமத்தின் உண்மையான பெயரை மீண்டும் தந்த நெடுஞ்சாலைத்துறை

கிராமத்தின் உண்மையான பெயரை மீண்டும் தந்த நெடுஞ்சாலைத்துறை

வடமதுரை: தினமலர் செய்தி எதிரொலியாக வடமதுரை வெள்ளபொம்மன்பட்டி அருகே சேர்வைக்காரன்பட்டியில் வேறு ஊர் பெயருடன் இருந்த பலகையில் மாற்றம் செய்து மீண்டும் உண்மையான பெயர் இடம் பெற்றது.திண்டுக்கல் மாவட்டத்தில் பல இடங்களில் ரோடுகளில் வைக்கப்பட்டுள்ள நெடுஞ்சாலைத்துறை பெயர் பலகைகள், அந்த ஊருக்கும் பலகையில் இருக்கும் பெயருக்கும் தொடர்பில்லாமல் இருக்கின்றன. இவை மக்கள், பயணிகள், பள்ளி சிறுவர்களுக்கு தவறான வழிகாட்டுதலாக இருப்பது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக வடமதுரை வெள்ளபொம்மன்பட்டி அருகில் உள்ள சேர்வைக்காரன்பட்டிக்கு சோலைக்காரன்பட்டி என வைக்கப்பட்டிருந்த பலகையில் சேர்வைக்காரன்பட்டி என்ற சரியான பெயரை மீண்டும் நெடுஞ்சாலைத்துறையினர் இடம் பெற செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !