உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பழநி அடிவாரம் கிரி வீதி சிறு வியாபாரிகளுக்கு மக்கள் சந்தை ஹிந்து முன்னணி மாநில தலைவர் வலியுறுத்தல்

பழநி அடிவாரம் கிரி வீதி சிறு வியாபாரிகளுக்கு மக்கள் சந்தை ஹிந்து முன்னணி மாநில தலைவர் வலியுறுத்தல்

பழநி: ''பழநி அடிவாரம் கிரி வீதி பகுதியில் உள்ள சிறு வியாபாரிகள் வாழ்வாதாரம் மேம்படுத்த மக்கள் சந்தை அமைக்க வேண்டும்'' என ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கூறினார்.பழநி முருகன் கோயிலில் வேல் வழிபாடு செய்து புலிப்பாணி ஆசிரமம் வந்த அவர் கூறியதாவது: சென்னிமலையை கிறிஸ்தவ மலையாக மாற்றுவதாக கூறியதற்கு 50 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது 2023 ஜனவரியில் சென்னிமலையில் வேல் வழிபாடு துவங்கி பழநி மலையில் நிறைவு பெற்றது. இந்தாண்டு சென்னிமலையில் துவங்கி சிவன்மலை, ஊதியூர், பழநிமலை, புலிப்பாணி ஆசிரமத்தில் வழிபாடு நடத்தப்பட்டுள்ளது. கொங்கு பகுதியில் உள்ள மருதமலை உட்பட ஏழு முருகன் கோயிலில் வழிபாடு நடத்தப்பட உள்ளது. நவ. 25 அன்று அழகுமலை கோயிலில் நிறைவுபெற உள்ளது.பழநி கிரி வீதி பகுதியில் நீதிமன்ற உத்தரவின் படி ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. ஆனால் சிறு வியாபாரிகள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த அரசு அல்லது ஹிந்து அறநிலைத்துறை சிறு வியாபாரிகளுக்கு மக்கள் சந்தை போன்று இடம் ஒதுக்கீடு செய்ய வேண்டும். வியாபாரிகள் பாதிக்கப்படுவதை சரி செய்ய வேண்டும்.இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பல்வேறு வரலாறுகள் மறைக்கப்பட்டுள்ளது. அவற்றை வெளிக்கொணர வேண்டும். வக்பு வாரிய சொத்துக்கள் ஒரு பகுதியில் இருந்தால் அப்பகுதி முழுவதும் தடையில்லா சான்றுகளை பெற்று இடங்களை பதிய வேண்டிய சூழல் உள்ளது. இதை மாற்ற மத்திய அரசு சட்டம் இயற்றியுள்ளது. ஹிந்துக்கள் சொத்துக்களை பதிய தடையில்லா சான்று தேவையில்லை என்பதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ