மேலும் செய்திகள்
மேயர் பகிர்ந்த 'ரகசியம்'; 'அரசியல்' ஆன அதிசயம்
03-Dec-2024
திண்டுக்கல் : ''மலைக்கோட்டையில் அபிராமி அம்மனை அமர்த்தும் நோக்கில் திண்டுக்கல்லில் விரைவில் ஆன்மிக மாநாடு நடக்க உள்ளதாக'' ஹிந்து முன்னணி மாநில செயலர் செந்தில்குமார் கூறினார்.ஹிந்து முன்னணி அமைப்பில் ஒன்றான ஹிந்து அன்னையர் முன்னணி சார்பில் பெண்களுக்கு பயிற்சி முகாம் திண்டுக்கல்லில் நடந்தது.ஹிந்து முன்னணி மாநில செயலர் செந்தில்குமார் தலைமை வகித்தார். மாநில அமைப்பாளர் ராஜேஷ் வழி நடத்தினார். மாவட்ட தலைவர் ராஜா, துணைத் தலைவர்கள் வினோத்ராஜா, ரவிச்சந்திரன், செயலர் மணிமாறன் முன்னிலை வகித்தனர்.மாதந்தோறும் பவுர்ணமியன்று திண்டுக்கல் மலைக்கோட்டை பத்மகிரிமலையை சுற்றி நடைபெறும் பவுர்ணமி கிரிவலத்தை சிறப்படைய செய்வற்காக குழந்தைகளுக்கான பண்பாட்டு வகுப்பு, திருவிளக்கு பூஜை உள்ளிட்ட ஆன்மிக நிகழ்வுகளை நடத்துவதற்கு கற்றுக் கொள்வது குறித்த பயிற்சிகள் வழங்கப்பட்டன. கிரிவலம், மலைக்கோட்டையில் மீண்டும் அபிராமி அம்மனை பிரதிஷ்டை செய்வது குறித்து பொதுமக்களிடம் எடுத்துக் கூற வேண்டும் என்பன உள்ளிட்ட முடிவுகள் எடுக்கப்பட்டன. மாநில செயலர் செந்தில்குமார் கூறுகையில் ,''மலைக்கோட்டையில் அபிராமி அம்மனை அமர்த்தும் நோக்கில் விரைவில் ஆன்மிக மாநாடு திண்டுக்கல்லில் நடக்க இருக்கிறது'' என்றார்.
03-Dec-2024