மேலும் செய்திகள்
டி.எஸ்.எல் சூப்பர் மார்க்கெட் திறப்பு விழா
02-Oct-2025
திண்டுக்கல்: திண்டுக்கல் தாடிக்கொம்பு ரோட்டில் உள்ள விருதுநகர் ஹிந்து நாடார் உறவின்முறை ஏ.சி., மீட்டிங் ஹால் திறப்பு விழா நடந்தது. எம்.எஸ்.பி. சோலைநாடார் நினைவு மேல்நிலைப்பள்ளி தலைவர் கதிரேசன், மதிச்செல்வன் தலைமை வகித்தனர். டாக்டர் மதிச்செல்வன் திறந்து வைத்தார். உணவு கூடத்தை உறவின்முறை முன்னாள் செயலாளர் பி.டி.கே. பாலசுப்பிரமணியன் திறந்து வைத்தார். உறவின்முறை தலைவர் சிவராமன் வரவேற்றார். எம்.எஸ்.பி.,பள்ளி தாளாளர் கதிரேசன், உறவின்முறை துணை த்தலைவர் ராஜேந்திரன், பொருளாளர் ஜெகன்நாதன், செயலாளர் ராஜேந்திரன், இணை செயலாளர்கள் சங்கரலிங்கம், தங்கவேலு, அருணா சேம்பர் பிரிக்ஸ் மணிகண்டன், கார்த்திக் ஆடிட்டர் சிற்றம்பலம் நடராஜன், ஈசான் மாடர்ன் ஹோம்ஸ் இயக்குனர் தெய்வேந்திரன்,உறவின்முறை நிர்வாக உறுப்பினர்கள் லட்சுமண பெருமாள் ,செல்வம், வேலு மஹால் உரிமையாளர் பழனிசாமி, பி.வி. டெகரேட் உரிமையாளர் விக்னேஷ். விசாலாட்சி டிஸ்ட்ரிபியூட்டர் இயக்குனர் கனகராஜ், சரவணா ஆயில் ஸ்டோர் உரிமையாளர் பாலாஜி,ஜெயச்சந்திரா என்டர்ப்ரைசஸ் உரிமையாளர் ஈஸ்வர பாபு மனோகரன் பங்கேற்றனர்.
02-Oct-2025