உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பழனி கோவில் கருவறையில் சிலை; பாதுகாப்பு குழு ஆய்வு

பழனி கோவில் கருவறையில் சிலை; பாதுகாப்பு குழு ஆய்வு

பழனி : பழனி முருகன் கோவில் மூலவர் சிலை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் போகர் சித்தரால் நவபாஷாணத்தில் வடிவமைக்கப்பட்டது. இச்சிலையை பாதுகாப்பது குறித்து நீதிமன்ற வழிகாட்டுதலின்படி, ஓய்வு பெற்ற நீதிபதி பொங்கியப்பன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இக்குழுவினர் நவபாஷாண சிலை குறித்து அவ்வப்போது ஆய்வு செய்கின்றனர்.இந்த குழுவின் தலைவர் பொங்கியப்பன், குன்றக்குடி, பேரூர், சரவணம்பட்டி ஆதீனங்கள், பிள்ளையார்பட்டி பிச்சை குருக்கள், பழனி கோவில் முன்னாள் இணை கமிஷனர் நடராஜன், ஐ.ஐ.டி., பேராசிரியர் முருகையா தலைமையிலான குழுவினர் நேற்று கோவிலுக்கு வந்தனர். அப்போது பிரம்மசுத்தி யாகம் நடந்தது.அதன்பின் குழுவினர் நவபாஷாண சிலையை ஆய்வு செய்தனர். பொங்கியப்பன் கூறுகையில், ''பழனி மூலவர் சிலை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு ஸ்திரத்தன்மையுடன் இருக்கும். ஐ.ஐ.டி., குழுவினர் அறிக்கை சமர்ப்பிப்பர்,'' என்றார். குழுவினர் ஆய்வு காரணமாக, காலை 9:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை தரிசனத்துக்கு அனுமதிக்கப்படவில்லை. 3 மணி நேரம் பக்தர்கள் அவதியடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை