தி.மு.க.,வில் அ.தி.மு.க.,வினர்
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் வீரலப்பட்டியை சேர்ந்தவர் மணி. இவர் ஒன்றிய அ.தி.மு.க., பிரதிநிதியாக உள்ளார்.இவரது தலைமையில் 100க்கு மேற்பட்ட அ.தி.மு.க., வினர் திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயலாளரான அமைச்சர் சக்கரபாணி முன்னிலையில் தி.மு.க., வில் இணைந்தனர். மாவட்டத் துணைச் செயலாளர் ராஜாமணி, ஒன்றிய செயலாளர் ஜோதீஸ்வரன், தர்மராஜ், துணைச் செயலாளர் முருகானந்தம், மாவட்டம் மகளிர் அணி அமைப்பாளர் மலர்விழி செல்வி, ஊராட்சித் தலைவர்கள் வேலுச்சாமி, பன்னீர்செல்வன் கலந்து கொண்டனர்.