உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / செய்தி சி லவரிகளில்... உலக மயக்கவியல் தினவிழா

செய்தி சி லவரிகளில்... உலக மயக்கவியல் தினவிழா

உலக மயக்கவியல் தினவிழா திண்டுக்கல் : உலக மயக்கவியல் தினவிழா திண்டுக்கல் அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லுாரியில் நடந்தது. டீன் சுகந்திராஜகுமாரி தலைமை வகித்தார். துணை கண்காணிப்பாளர் டாக்டர் சுரேஷ்பாபு,துணை முதல்வர் கீதாராணி,மயக்கவியல் துறை தலைவர் கீதாராணி,இந்திய மயக்கவியல் சங்க திண்டுக்கல் கிளை தலைவர் லட்சுமி,பொருளாளர் பெரியசாமி முன்னிலை வகித்தனர். ஸ்கில் லேப் புதிதாக மாணவர்கள் பயன்பாட்டிற்காக கொண்டுவரப்பட்டது.மாட்டு தொழுவத்தில் உடும்புவத்தலக்குண்டு : மேலகோவில்பட்டி இந்திரா நகரில் கிருஷ்ணமூர்த்தி மாட்டுத் தொழுவத்தில் உடும்பு பதுங்கி இருப்பதாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் கிடைத்தது. தீயணைப்பு துறையினர் மீட்டு வனத்துறையிடம் ஒப்படைத்தனர். கடவாகுறிச்சி மலையில் இருந்து வழி தவறி ஊருக்குள் புகுந்து இருக்கலாம் என தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர்.சட்ட விழிப்புணர்வு முகாம்திண்டுக்கல்: தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு வழிகாட்டுதலின்படி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் பெண்களுக்கான சட்ட விழிப்புணர்வு முகாம் திண்டுக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்தது. முதன்மை மாவட்ட நீதிபதி முத்துசாரதா தொடங்கி வைத்தார். வழக்கறிஞர்கள் சுதந்திராதேவி,தீபா பேசினர். மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் சார்பு நீதிபதி திரிவேணி நன்றி கூறினார்.கலெக்டர் ஆய்வுதிண்டுக்கல் :திண்டுக்கல் அரசு மருத்துவமனை உள்பகுதியிலிருந்து மறுபுறம் ரோட்டிற்கு சாக்கடை செல்கிறது. இதில் சில தினங்களுக்கு முன் அடைப்பு ஏற்பட்டு தேங்கியது. திண்டுக்கல் அரசு மருத்துமவனையில் ஆய்வு செய்த கலெக்டர் பூங்கொடி சாக்கடையை சுத்தப்படுத்த மாநகராட்சி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இதை தொடர்ந்து அடைப்பு சரி செய்யப்பட்டது.அக். 21ல் திருக்கல்யாணம்அம்மையநாயக்கனுார்: அம்மையநாயக்கனுார் கதலி நரசிங்கப்பெருமாள் கோயிலில் கும்பாபிேஷக முதலாம் ஆண்டு நிறைவினையொட்டி அக். 21 காலை 9:00 மணிக்கு யாக வேள்வி பூஜை , மாலை 4:30 மணிக்கு திருக்கல்யாணம், கருட வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெறுகிறது. இதை தொடர்ந்து அன்று காலை 11:00 மணி முதல் அன்னதானம் வழங்கப்படுவதாக கோயில் நிர்வாக அதிகாரி வீரசிவபாலன் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ