உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் வரத்து அதிகரித்த பழைய சின்ன வெங்காயம்

ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் வரத்து அதிகரித்த பழைய சின்ன வெங்காயம்

ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் பழைய சின்ன வெங்காயம் வரத்து அதிகரித்து ரூ.30 முதல் 60 வரை விற்பனையானது.ஒட்டன்சத்திரம், சாலைப்புதுார், காவேரியம்மாபட்டி, தங்கச்சியம்மாபட்டி, அம்பிளிக்கை, அரசப்பபிள்ளைபட்டி, விருப்பாச்சி சுற்றிய கிராமப் பகுதிகளில் சில மாதங்களுக்கு முன்பு கோடை வெங்காயம் நடவு செய்யப்பட்டது. அறுவடை போது விலை குறைவாக இருந்ததால் அவற்றை விவசாயிகள் சேமித்து வைத்தனர்.இந்நிலையில் அவ்வப்போது மழை பெய்வதால் சேமித்து வைக்கப்பட்ட வெங்காயம் அழுகத் தொடங்கியது.இதனால் அவற்றை விற்பனை செய்ய ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டுக்கு விவசாயிகள் அனுப்பி வைக்கின்றனர். தரமான பழைய சின்ன வெங்காயம் கிலோ ரூ.60க்கு விற்பனையாக தரம் குறைந்த வெங்காயம் கிலோ ரூ.30க்கு விற்பனையானது. எதிர்பார்ப்புக்கு மாறாக முன்கூட்டியே வெங்காயம் விற்பனை செய்யப்படுவதால் விவசாயிகளுக்கு எதிர்பார்த்த விலை கிடைக்காது ஏமாற்றமடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !