தெருவை ஆக்கிரமிக்கும் தனிநபர்கள்
வத்தலக்குண்டு : எழுவனம்பட்டி ஊராட்சி கடம்பனூரில் கடந்த ஒரு மாதமாக தெரு பிரச்னை இருந்து வந்தது. இது சம்பந்தமாக வத்தலக்குண்டு போலீசில் கிராமத்தினர் புகார் செய்தனர். விராலிப்பட்டி வி.ஏ.ஓ., ஊர் பொதுமக்கள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடந்தது. முடிவில் சம்பந்தப்பட்ட பாதை பொது வீதி என தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் வீதியை எந்த ஒரு தனிநபரும் ஆக்கிரமிப்போ செய்யவோ, முட்களை கொண்டு அடைக்கக் கூடாது என போலீசார் கூறினர்.இருப்பினும் தனிநபர்கள் சிலர் முட்களை வெட்டிப்போட்டு அப்பகுதியில் வரவிடாமல் ஆக்கிரமிப்பு செய்தனர். இதனால் பொதுமக்களுக்கள், பள்ளி குழந்தைகள், முதியவர்கள் போக்குவரத்திற்கு சிரமப்பட்டனர். ஆக்கிரமிப்பை அகற்றி பொதுமக்கள் நடமாடுவதற்கு வழி செய்ய வேண்டும் என அப்பகுதியினர் தெரிவித்தனர்.